சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவருக்கு போட்டியிடுகிறேன்

Malaysia, News, Politics

 211 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடவிருப்பதாக இளங்கோவன் முத்து தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதித் தேர்தலில் பெரும்பாலான கிளைத் தலைவர்களின் ஆதரவோடு தாம் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

சுங்கை சிப்புட் மஇகா மீண்டும் துடிப்புடனும் ஆக்ககரமாகவும் செயல்பட வேண்டும் எனும் நிலையில் தாம் மீண்டும் இப்பொறுப்புக்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தான் தொகுதித் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆசி வழங்கியுள்ளதாகவும் இளங்கோவன் சொன்னார்.

Leave a Reply