சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடப் பணிக்கு நிதி தேவை !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 80 total views,  2 views today

– டி ஆர் ராஜா –

பட்டர்வர்த் – 5 செட்டம்பர் 2022

கடந்த 10 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணி தொடங்கிய நிலையில் கட்டுமானப் பணிக்கான பணப் பற்றகுறைவினால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது .

சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள் விரிவாக்கம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிலையில் பள்ளி கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று பள்ளியின் மேளாலர் வாரியக் குழுத் தலைவர் மோகன் சின்னய்யா தெரிவித்தார்.

சுமார் 80 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளிகான புதிய கட்டட நிர்மாணிப்புக்கான கூடுதல் நிதியுதவி கோரி கல்வி அமைச்சிடம் கோரிக்கையை கடந்த 2021இல் பள்ளியின் மேலாளர் வாரிய குழு முன் வைத்திருந்தனர்.

அதற்கு எவ்வித பயனுமில்லை என கூறிய அவர், புதிய கட்டுமானத்திற்கான பணிகள் 4 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி கொண்ட அனைத்து பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் கொண்ட பள்ளியாகவும் ,18 அறைகள் கொண்டு கட்டபடவிருக்கும் நிலையில் தற்போது புதிய கட்டம் 25 விழுக்காடு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

கூடுதல் விரிவக்கத்துடன் பள்ளியில் மேலும் அறிவியல் அறை, கைத்திறன் அறை, கலைக் கல்வி அறை, விளையாட்டு அறை, இன்னும் சில அறைகளும் கட்டுமான விரிவாக்கத்தில் அடங்கும்.

ஏற்கனவே கட்டுமானத்திற்கு 8 இலட்சம் வெள்ளி செலவிடவிருந்தது தற்போது இந்த விரிவாக்கப் பணிகள் பள்ளியின் பாதுகாப்பையும் மாணவர் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தண்ணீர் தேக்க குளம், பாதுகாவலர் அறை இன்னும் சில திட்டங்களுக்காகவும் தற்போது விலை அதிகரிப்புக் காரணங்களாலும் கட்டுமானத்திற்கான செலவு ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது என மோகன் சின்னய்யா கூறினார்.

இந்த பள்ளியின் 24,000 சதுர அடி நிலபரப்பில் கட்டுமானப் பணிகள் அமையவிருந்த வேளையில் கூடுதல் விரிவாக்கத்துடன் 31,000 சதுர அடி நிலப்பரப்பில் அமையப்படள்ளது.

இது முழு அரசாங்கப் பள்ளியாக அமையப்படவுள்ள இப்புதிய கட்டடம் நிறைவு பெறுவதற்கு சாத்தியமாகியுள்ள நிலையில் அதற்கான அனைத்து அடிப்படை வேலைகள் 37 விழுக்காடு நிறைவடைடைந்துள்ளது. கூடுதல் நிதியுதவி தங்களுக்கு கிடைத்தால் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடைவதற்கு சாத்தியம் என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில் பொறுப்பற்ற சில தரப்பினர் தவறான அவதூறுகளை சமூக வலைத் தளங்களில் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய பள்ளிக்கான கட்டட வேலைகள் கடந்த ஏப்ரல் 9இல் தொடங்கின. கூடுதல் நிதியுதவி பெற்றால் இதன் பணிகள் 2024இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

சுங்கை பக்காப் ஜாலான் பாடாக் மத்திய சாலையோரத்தில் அமைந்துள்ள இப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அருகிலுள்ள தாமான் சுருலீங் இமாஸ், சுங்கை பாக்காப், தாமான் லீமா கொங்சி, தாமான் ஜாவி, தாமான் கெமிலாங், தாமான் கெசும்பா, தாமான் கெத்திதீர் உட்பட சுற்று வட்டாரத்திலுள்ள மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர் ,

இப்பள்ளி பயின்று வரும் மாணவர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் இப்பள்ளிக்கான புதிய கட்டுமானத் திட்டம் அமையப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் பல்வேறு தமிழ்ப்பள்ளிக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டு அவை மேம்படுத்தபட்டன. அவற்றில் சுங்கை பக்காப் த்மிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். தாமான் சுருலீங் இமாஸ் அருகே இந்த 4 ஏக்கர் நிலத்தை அடையாளம் கன்டு கடந்த 2015இல் 35 லட்சம் வெள்ளி நிதியுதவியை முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப .கமலநாதன் வழங்கினார்.

எனினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் சர்ச்சைகள் நீடித்தன.

பினாங்கு மாநில துணை முதலமைச்சஎ பேராசிரியர் ப இராமசாமி உள்ளிட பலரின் முயற்சியால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு வகை செய்யப்பட்டது.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் பள்ளியின் மேளாலர் வாரிய குழு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாதன், பொறுப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர் .

Leave a Reply