சுங்கை வே ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு மாற்று நிலம்- கணபதிராவ்

Malaysia, News

 271 total views,  2 views today

ஷா ஆலம்

மேம்பாட்டுத் திட்டத்தினால் உடைபடும் அபாயத்தை எதிர்கொண்ட பெட்டாலிங் ஜெயா, சுங்கை வே, ஶ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட முயற்சி பலனளித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.


2009ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தை வேறு நிலத்திற்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேம்பாட்டு நிறுவனமான மெலாத்தி ஏசான் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையின் வாயிலாக வீடமைப்பு மேம்பாட்டுப் நிலத்திலேயே மாற்று நிலம் வழங்கப்பட்டது.


இந்த ஆலயத்திற்கு நிலம் உறுதி செய்யப்பட்ட கடிதத்தை மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஆலயத் தலைவர் சிவாவிடம் வழங்கினார்.


இந்த ஆலய நில மாற்று முயற்சியில் உறுதுணையாக இருந்த ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோருக்கு நன்றி கூறி கொள்வதாக கணபதிராவ் குறிப்பிட்டார்.

Leave a Reply