செஞ்சோற்றுக்கடன் தீர்க்கவே சுங்கை சிப்புட் வந்தேன்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 97 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

கடந்த 40 ஆண்டுகளாக மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களை ஆதரித்த காரணத்திற்காகவே சுங்கை சிப்புட் மக்களுக்கு சேவையாற்ற இங்கு களமிறங்கியுள்ளேன் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்துள்ளனர்.


அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருவாக்கிய சுங்கை சிப்புட் மக்களுக்கு செஞ்சோற்றுக்கடன் தீர்க்கவே சுங்கை சிப்புட்டிற்கு வந்தேன்.
அதற்கேற்ப இங்குள்ள மக்களுக்கு முடிந்தளவிலான சேவையை வழங்கியுள்ளேன்.

மஇகாவின் தலைவராக இருந்து கொண்டு சுங்கை சிப்புட்டில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இத்தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று மலேசிய நட்சத்திரங்களுடன் ஒரு மாலை பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Leave a Reply