செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021

Malaysia, News

 167 total views,  1 views today

கிள்ளான், அக்.20-

சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 எனும் பாடல் திறன் போட்டி செந்தோசா சட்டமன்றத் தொகுதி அலுவகத்தின்  ஏற்பாட்டில் நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற 7 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கான பாடல் திறன் போட்டியின் தேர்வு சுற்று நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான சிறார்கள் பங்கெடுத்து தங்களது திறமையை வெளிபடுத்திய நிலையில் சிறந்த நிலையில் தனது திறமையை வெளிபடுத்திய முதல் 20 பேர் வரும் 24ஆம் தேதி நடைபெறும் காலிறுதி சுற்றுக்கு தேர்வானார்கள்.

ஐ-சேனல் E-Paper-ஐ-படிக்க கீழே உள்ளLink-ஐ-அழுத்தவும்..

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூக தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான இந்த பாடல் திறன் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் வெ.14,000 மதிப்பிலான ரொக்கம் வரை வெல்லவுள்ளனர்.

நாட்டில் புகழ்பெற்ற பாடகர்களைக் கொண்டு இந்த பாடல் திறன் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply