செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண்ராஜின் ‘Drive thru’ தீபாவளி கொண்டாட்டம்

Malaysia, News, Politics

 204 total views,  1 views today

கிள்ளான்-

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் ‘Drive thru’ முறையிலான தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கடந்தாண்டு முதல் ‘Drive thru’ முறையிலான தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று இவ்வாண்டும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் உணவு, இனிப்பு பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் காரில் பயணித்தவர்களுக்கு அப்பொட்டலங்களையும் அன்பளிப்பையும் குணராஜ் எடுத்து வழங்கினார்.

1,500க்கும் மேற்பட்டோருக்கு இந்த தீபாவளி பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்ட குணராஜ், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் நமது பண்பாட்டு நிகழ்வை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் எனும் எண்ணத்தில் இரண்டாவது ஆண்டாக ‘Drive thru’ தீபாவளி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

இந்நிகழ்வில் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், செந்தோசா சிறப்புப் படையினர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply