செப்டம்பரில் நாடாளுமன்றம் கலைப்பு?

Malaysia, News, Politics

 245 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எப்போது என்பதே இப்போது பலரின் கேள்வியாக உள்ளது.

இன்னும் 12 மாதங்களில் நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் நிறைவடையும் நிலையில் இன்னும் சில மாதங்களில் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

நாட்டில் நிலவும் நிலையில்லா அரசியல்தன்மை, கட்சி தாவல் போன்ற காரணங்களால் இதுவரை ஒரே தவணையில்  3 பிரதமர்கள் மாறியுள்ளனர்.

இதனிடையே வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அக்டோபரில் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் ஆருடம் பரவி வருகிறது.

விரைவில் நடைபெறும் என பூச்சாண்டி காட்டப்படும் 15ஆவது பொதுத் தேர்தல் சீக்கிரமே நடந்தால் போதும் என்கிற மனநிலையே இன்று மலேசியர்களிடத்தில் காணப்படுகிறது.

Leave a Reply