செப்டம்பருக்கு முன்னதாகவே அரசை கவிழ்ப்பது மாமன்னருக்கு இழைக்கும் துரோகமாகும்

Uncategorized

 170 total views,  1 views today

கோலாலம்பூர்-

செப்டம்பரில் நடத்தப்படவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையை முன்னெடுப்பது மாமன்னருக்கும் இழைக்கப்படும் துரோகச் செயலாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மாமன்னரிடன் தெரிவித்தபடி பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த மாதம் நடத்தப்படும். மாமன்னருக்கு வழங்கிய உறுதிப்பாட்டின் வழி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் ஆளூம் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று அம்னோவின் உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

Leave a Reply