செப்.1இல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா ?

Malaysia, News, Politics

 66 total views,  3 views today

(ஐ சேனல் சிறப்புச் செய்தி)

ரா. தங்கமணி

கோலாலம்பூர் – 25 ஆகஸ்டு 2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எப்போது?என்ற கேள்வியே மலேசியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் நீடிக்கின்ற நிலையில் இவ்வாண்டுக்குள்ளாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிடவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அக்டோபரில் வேட்புமனுத் தாக்கலும் நவம்பரில் பொதுத் தேர்தலும் நடத்தப்படுவதற்கு அட்டவணை தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆருடங்கள் வலுக்கின்றன.

அதன் அடிப்படையிலேயை வரும் 30ஆம் தேதி பொதுச் சேவை துறையினருக்கான இனிப்பான பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி வெளியிடவுள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply