செப் 10 : அனைத்துலகத் தற்கொலை தடுப்பு நாள் !

Health, Malaysia, News, World

 53 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10 செப் 2022

தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் அனைத்துலகத் தற்கொலை தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை சமாளித்து போராடிதான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்திந்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல்.

பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர் எந்தளவு துன்பப்படுவர் என அறிவதில்லை. ‘செயல் வழி நம்பிக்கையை உருவாக்குதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தற்கொலை எண்ணங்கள் கட்டுப்படக் கூடியதே என்ற உண்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு, இந்த சிறப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

சூழ்நிலை பாதிப்பு, தன்மானம் ஆகியவை, தற்கொலை முயற்சியை தோற்றுவிக்கிறது. தக்க ஆலோசனை இல்லாத காரணத்தினால் தற்கொலை அதிகம் நடக்கிறது. தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது என்பதை நாமும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச்செய்ய வேண்டும்.

ஒருவர் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால், அதற்கு உடனடியாக தக்க சிகிக்சை அளிக்க வேண்டும். தற்கொலை முயற்சி என்பது மனநோய்களில் அவசர நிலையாகும்.

Leave a Reply