செப்.11 – அமெரிக்காவை கதிகலங்க வைத்த தீவிரவாதம்

News, World

 238 total views,  1 views today

ஆக்கம்: ரா.தங்கமணி

செப்டம்பர் 11…. உலக நாடுகளின் வல்லரசன் என்று மார்தட்டிய அமெரிக்காவையே கதி கலங்க வைத்த நாள்.. பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகறியச் செய்த இன்றைய உலக வரலாற்றில் என்றுமே கறுப்பு தினமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


விமானப் போக்குவரத்துத் துறையையே கதிகலங்க வைக்கும் வகையில் அல்-கய்டா எனப்படும் தீவிரவாத அமைப்பு அரங்கேற்றிய ரத்த வெறி தாக்குதலில் 3,000க்கும் அதிகமானோரை பலி கொண்டது செப்டம்பர் 11 தாக்குதல்.


4 விமானங்கள் கடத்தப்பட்டு அதில் இரண்டு விமானங்களை உலக வர்த்தக மையத்தில் மோதி வெடிக்கச் செய்து தீவிரவாதிகல் தங்களது கொடூரச் செயலை நிகழ்த்தி காட்டினர்.


உலகமே அதிர்ந்த அந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது 3ஆவது விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகளின் எண்ணம் முறியடிக்கப்பட்டது.


தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4ஆவது விமானம் தனது இலக்கை அடைவதற்கு திறந்த வெளி நிலப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது.


இவை அனைத்து சரியாக திட்டமிட்டு அரங்கேற்றிய தீவிரவாதிகளின் செயலை சாதுரியம் என்பதா? அதி உயர் பாதுகாப்பை கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு தோல்வி என்பதா? என தெரியாமல் உலகமே விழி பிதுங்கி நின்றது.


உலக வர்த்தக மையமான இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் வடக்கு கட்டடத்தை முதல் விமானம் மோதி விபத்துக்குள்ளானதை பலரும் பார்த்தும் காணொளியாக பதிவு செய்துக் கொண்டிருந்த தருணம் தெற்கு கட்டடத்தை மற்றொரு விமானம் மோதுவதை நேரலையாக பார்த்தவர்கள் ஒரு கணம் தங்களது மூச்சையே நிறுத்தியிருப்பர்.


விமானங்கள் மோதியதால் தீப்பற்றி எரிந்த கட்டடத்தில் தீசுவாலை கொளுந்து விட்டு எரிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருந்தாலும் அந்த இறுதி நொடியில் கூட உயிர் தப்பிக்க மாட்டோமா? என்ற ஆசையில் கட்டடத்திலிருந்து வெளியே குதித்தவர்களின் புகைப்படங்களும் நெஞ்சை ரணமாக்குபவையாகும்.


இந்த இரட்டை கோபுர வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்திய 20 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அதன் ரணம் மட்டும் அமெரிக்கர்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் இன்னமும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர்.


(ஏன் அமெரிக்காவின் மீது இந்த தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது?, செப்டம்பர் 11இல் நடத்தது என்ன?, இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அய்-கய்டா அமைப்பு என்னவானது?, 20 ஆண்டு கால போரை ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்கா நடத்த வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவின் மீதான தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதத்திற்கு பின்னர் அணி திரண்ட நாடுகளின் நடவடிக்கை என்ன? போன்ற அரிய தகவல்கள் இனி தினந்தோறும் நமது ஐ-சேனல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.)

Leave a Reply