செப்.17 முதல் தனியார் துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதி

Malaysia, News

 154 total views,  3 views today

கோலாலம்பூர்-

தேசிய மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களில் செயல்படும் தனியார் துறையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் செப்டம்பர் 17 முதல் சில நிபந்தனைகளுடன்செயல்பட அனுமதிக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தனியார் துறையில் உள்ள அலுவலகங்கள் 80 விழுக்காடு பணியாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் முழு திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றார்.
“தனியாருக்கு 60 விழுக்காடு பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்களின் அலுவலகங்கள் 80 விழுக்காட்டிற்கு மேற்போகாத திறன் கொண்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம்.
“தனியார்துறையினர் தங்கள் பணியாளர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கிறார்கள், அவர்கள் 60 விழுக்காடு திறனில் மட்டுமே அலுவலகத்தை மீண்டும் தொடங்க முடியும்,” என்று அவர் கூறினார்.

Leave a Reply