
செய்தி துளிகள் 8/10/2022
190 total views, 1 views today
கோலாலம்பூர்-
* நாட்டின் முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தை கடனாக பெறுவது ஒரு குறுகிய கால, தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும் இந்த பிரச்சினைக்கு மலேசியா நீண்ட கால தீர்வை காண வேண்டும் என்று தலைமை கணக்காய்வாளர் நிர் அஸ்மான் நிக் அப்துல் மஜித் எச்சரித்துள்ளார்.
* நேற்று மக்களவையில் அறிவிக்கப்பட்ட 2023க்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கான ஒதுக்கீடு 11.5 விழுக்காடு அதிகரித்திருப்பதன் மூலம் சுகாதார தேவைக்கு பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் முருகராஜ் ராஜதுரை கருத்து தெரிவித்தார்.
* சீனாவின் ஜின்ஜியாங் மாநிலத்தில் Uyghurs மற்றும் இதர சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்துவதாக சீனாவுக்கு எதிரான குறைகூறல்கள் இருந்து வருகின்றன. சீனாவின் இந்த மனித உரிமை மீதான ஐநா தீர்மானத்தில் மலேசியா வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்கும் போக்கை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.
* நேற்று அறிவிக்கப்பட்ட 2023க்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு இல்லாமல் போனது இந்திய சமுதாயத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் அலட்சியப்போக்காக அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
* PBM எனப்படும் பார்ட்டி பங்சா மலேசியாவின் அதிகாரப்பூர்வ தலைவராக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுரைடா கமாருடின் அறிவிக்கப்பட்டார்.