சொக்சோ சந்தாவை உறுதி செய்து கொள்ளுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News

 363 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான்,அக்.16-

தொழில் செய்யும் இடங்களில் தங்களுக்கு சொக்சோ சந்தா முறையாக செலுத்தப்படுகிறதா? என்பதை மலேசியர்கள் தங்களது முதலாளிமார்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் சொக்சோ  காப்பீடு சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. நாடு முழுவதும் உள்ள முதலாளிமார்கள் தங்களது ஊழியர்களுக்கு சொக்சோ சந்தாவை கட்டாயம் செலுத்த வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு பின்னர் பாதிக்கப்படும் குடும்பங்களின் துயரை போக்க சொக்சோ ஒரு வழிதடமாக இருக்கும்  நிலையில் சொக்சோ பயன்பாடு தொடர்பில் மக்கள் இன்னும் அதிகமான விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்.

தங்களுக்கான சொக்சோ சந்தா முறையாக செலுத்தப்படுகிறதா? என்பதை முதலாளிமார்களிடம் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

ஒரே வருடத்தில் தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் சிறார்களை சந்தித்து ஆறுதல் கூறியபோது செய்தியாளார்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இன்னும் பல செய்திகளுக்கு….

Leave a Reply