சொத்துகளை ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும் ! – பிரதமர்

Malaysia, News, Uncategorized

 214 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர்  – 19 செப் 2022

 அரசு சார்ந்த நிறூவனங்கள், அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைச் செயல்முறை அதிகாரிகளும் நீதிபதிகளும் தங்களின் சொத்து மதிப்பை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் செய்ய வேண்டும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நாட்டின் ஆட்சி முறை, நேர்மைத் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இது அமையும் என அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், சட்டம் 374 அல்லது நாடாளுமன்றச் சட்டம் (சிறப்பு அதிகாரம்) 1952இல் ஒரு புதிய விதியை இணைக்கவும் இருப்பதாகப் பிரதமர் சொன்னார்.

அடுத்த நாடாளூமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னர், அரசியல் நிதி குறித்த சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சியிடம் இருந்து கருத்துகளைப் பெறப்படும் எனவும் எந்தத் தரப்பையும் சாராத ஒரு அமைப்பைக் கொண்டு இது கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply