சொந்த சின்னத்தில் பிகேஆர் போட்டியிட வேண்டும்- கூட்டரசுப் பிரதேச பிகேஆர் கோரிக்கை

Malaysia, News, Politics

 197 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதற்கு பிகேஆர் கட்சியின் சின்னமே முக்கிய காரணம் ஆகும். எனவே வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கூட்டரசு பிரதேச பிகேஆர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் அடுத்த வருடம் பிற்பகுதியில் நடைபெறலாம் என கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்த தேர்தலில் வெற்றியை நிலைநாட்ட இப்போதே சில கட்சிகள் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன.


அதில் ஒன்றாக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற போரை பிகேஆர் கட்சி இப்போதே தொடங்கியுள்ளது. பிகேஆர் கட்சி 20 ஆண்டுகளாக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் நன்கு அறிமுகமான கட்சியாக பிரசித்தி பெற்றுள்ளது.


‘கெஅடிலான் அனைவருக்குமானது’ என்ற முழக்கத்துடன் இனம், மதம் ஆகியவற்றை கடந்து பல இன மக்களை கொண்டுள்ள பல இன கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் 15ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என கூட்டரசுப் பிரதேச பிகேஆர் கட்சியின் செயலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது பக்காத்தான் ஹராப்பானின் நிலைப்பாட்டை கேள்விக்குறியதாக உருவாக்கியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கென்று தனி சின்னம் உள்ள நிலையில் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் இகூட்டணியில் உள்ள பிற கட்சிகளான ஜசெக, அமானா, அப்கோ போன்ற கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும்?


கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கென்று சொந்த சின்னம் இல்லாததாலே பொது சின்னமாக பிகேஆர் கட்சியின் சின்னம் அறிவிக்கப்பட்டு அக்கூட்டணியின் வேட்பாளர்கள் அதில் போட்டியிட்டனர்.


இப்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றிக்கு பிகேஆர் கட்சியின் சின்னம் தான் காரணமென்றால் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு செல்வாக்கு இல்லையா?


சின்னம் மட்டும்தான் பிரதானம் என்றால் வேட்பாளர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

Leave a Reply