ஜசெகவின் 4 உயர் தலைவர்கள் மீது எம்ஏசிசி-இல் புகார்

Crime, Malaysia, News

 378 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

புக்கிட் மெர்தாஜம்

பினாங்கு மாநில ஜசெகவைச் சேர்ந்த நான்கு உயர் தலைவர்கள் மீது இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் (எம்ஏசிசி) புகார் செய்யப்பட்டது.
1 மில்லியன் வெள்ளி மதிப்புடைய குத்தைகளை பெற்றது, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் புரிந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி இந்த 4 பேர் மீதும் புகார் செய்ததாக ஜசெக உறுப்பினர்களான எஸ்.பிரகாசன், அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த கருணை ஓவியம், எஸ்.ஜெகதீசன்,எஸ்.முருகேசன் ஆகியோர் புகார் கூறியிருந்தனர்.
2018இல் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் ஏற்கெனவே இருமுறை புகார் அளித்திருந்தும் தற்போது மூன்றாவது முறையாக புகார் தெரிவித்துள்ளோம்.
ஜசெக ஒரு தூய்மையான கட்சி, அதில் ஊழல் புரிந்துள்ளவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply