ஜசெகவில் புதிய தலைமைத்துவம்

Malaysia, News, Politics

 162 total views,  2 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,மார்ச் 21-

ஜசெகவின் புதிய தலைவராக லிம் குவான் எங்கும் புதிய தலைமைச் செயலாளராக லோக் சியூ ஃபோக் (அந்தோணி)  ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்சியின்  துணைத் தலைவராக கோபிந்த் சிங் டியோ, உதவித் தலைவராக எம்.குலசேகரன், துணை செயலாளராக வீ.சிவகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நடந்து முடிந்த கட்சியி ன் மத்திய செயலவைக்கான தேர்தலில் தோல்வி அடைந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமனம்  செய்யப்பட்டனர்.

அதன் அடிப்படையில் கணபதிராவ் கட்சியின் தகவல் பிரிவு துணைச் செயலாளராகவும் கஸ்தூரி ராணி பட்டு அனைத்துலக விவகார துணைச் செயலாளாராகவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply