ஜசெக தேர்தலில் 3 இந்தியர்கள் மட்டுமே வெற்றி

Malaysia, News, Politics

 314 total views,  1 views today

ஷா ஆலம்-

ஜசெகவின் மத்திய செயலவைக்கு போட்டியிட்ட 23 இந்தியர்களில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்
நேற்று இங்குள்ள ஐடிசிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜசெகவின் 17ஆவது பொதுப் பேரவையில் 2022- 2025ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவைக்கு 93 பேர் போட்டியிட்டனர்.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், பாகான் டாலாம் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் உட்பட பலர் போட்டியிட்டனர்.
இதில் கோபிந்த் சிங், குலசேகரன், கஸ்தூரி ராணி பட்டு ஆகிய மூவர் மட்டுமே மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
கோபிந்த் சிங் 1,782 வாக்குகளை பெற்று முதல் நிலையிலும் குலசேகரன் 1,226 வாக்குகளை பெற்று 13ஆவது இடத்தையும் கஸ்தூரி ராணி 978 வாக்குகளை பெற்று 25ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இதனிடையே 911 வாக்குகளை பெற்று பேராசிரியர் இராமசாமி, 758 வாக்குகளை பெற்று கணபதிராவ், 220 வாக்குகளை பெற்று காமாட்சி துரைராஜு, 858 வாக்குகளை பெற்று சிவகுமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.

Leave a Reply