ஜாலான் ஈப்போ அல்லது ஜாலான் ராஜா லாவூட்டுக்கு சாமிவேலுவின் பெயர் வேண்டும் ! – சிவபாலன்

Malaysia, News, Politics

 39 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 16 செப் 2022

ம.இ.கா.வின் தலைவராக நீண்டகாலம் பதவ் வகித்த மறைந்த துன் சாமிவேலுவின் பெயரை ஜாலான் ஈப்போ அல்லது ஜாலான் ராஜா லாவுட்டுக்கு வைக்க வேண்டும் என அவரிடம் கடந்த 2002 முதல் 2008 வரையில் பணியாற்றிய சிவபாலன் தெரிவித்தார்.

ஊடகச் செயலாளராக துன் சாமிவேலுவிடம் பணியாற்றிய சிவபாலன் பின்னர் அவரது அரசியல் செயலாளராக 2010 முதல் 2018 வரைடில் பணியாற்றினார்.

துன் சாமிவேலுவின் சேவையை அங்கீகரிக்கும் வரையில் இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினார் சிவபாலன்.

மேலும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்திற்கும் துன்  சாமிவேலுவின் பெயர் கொடுக்கப்பட அரசாங்கத்தை ம.இ.கா. வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

ம.இ.கா.வின் கல்விக் குழு வழிநடத்தும் எம்ஐஇடி அந்தப் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சியில், குறிப்பாக கட்டமைப்பு, இதர வசதிகள் தொடர்பாக அவரது பங்களிப்பு அளப்பரியது என்றார்.

கடன்ட 1974 முதல் 2008 வரையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய துன் சாமிவேலு நேற்று தமது 86வது வயதில் காலமானார்.

Leave a Reply