ஜெலுத்தோங்கை வெற்றி கொள்ள ஐபிஎஃப் மகளிர் பிரிவு தீவிர பரப்புரை முன்னெடுக்கும்

Malaysia, News, Politics

 48 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

ஐபிஎஃப் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட மகளிர் பிரிவு தீவிர களப்பணி ஆற்றும் என்று ஐபிஎஃப் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ராஜம்மா தெரிவித்தார்.

நீண்ட கால போராட்டத்தின் பயனாக தேசிய முன்னணி கூட்டணியில் ஜெலுத்தோங் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும் வகையில் தங்களது தீவிரமான பரப்புரையை கட்சியின் மகளிர் பிரிவு முன்னெடுக்கும்.

எந்த தேர்தலிலும் துவண்டு விடாமல் பரப்புரையை மேற்கொண்ட ஐபிஎஃப் கட்சியினர் தற்போது சொந்த கட்சியின் நலனுக்காக தீவிர நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

ஜெலுத்தோங் தொகுதி எதிர்க்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டாலும் அங்கு தனது வெற்றியை நிலைநாட்டி ஐபிஎஃப் புதிய சரித்திரத்தை படைக்கும்
என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply