ஜெலுத்தோங் தொகுதியை தக்க வைக்க போராடுவோம் !

Malaysia, News, Politics, Polls

 83 total views,  1 views today

இரா. தங்கமணி

பினாங்கு – 8/11/2022

ஐபிஎஃப் கட்சிக்கு முதல் முறையாக நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால் அதனை வெற்றி கொள்வதில் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் இளைஞர் தலைவர் கணேஷ் சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது ஐபிஎஃப் கட்சியின் 32 ஆண்டுகால போராட்டம்.

அது இப்போது சாத்தியமாகியுள்ள நிலையில் ஐபிஎஃப் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைக்க கட்சி உறுப்பினர்களும் இளைஞர் பிரிவினரும் போராடுவோம் என்று அவர் சொன்னார்.

வரும் தேர்தலில் ஜெலுத்தோங் தொகுதியில் ஐபிஎஃப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் போட்டியிடுகிறார்.

Leave a Reply