ஜெலுத்தோங் தொகுதியை தேமு வசமாக்குவோம் – டத்தோ லோகநாதன்

Malaysia, News, Politics

 139 total views,  1 views today

ரா.தங்கமணி

செர்டாங்-

ஜசெகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியை இம்முறை தேசிய முன்னணி கைப்பற்றும் வகையில் ஐபிஎஃப் கட்சி தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் டத்தோ லோகநாதன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் கீழ் ஐபிஎஃப் கட்சி வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இது ஐபிஎஃப் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் ஆகும். எங்களின் 32 ஆண்டுகால போராட்டத்தின் இன்று சாத்தியமாகியுள்ளது.

ஜெலுத்தோங் தொகுதியின் தேமு வேட்பாளராக தாம் களமிறங்கும் நிலையில் அங்கு வெற்றியை உறுதி செய்ய களப்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

ஜசெகவின் கோட்டையாக ஜெலுத்தோங் தொகுதி முன்பு இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலம் அத்தொகுதி தேமு வசமாகும். அதனை சாத்தியப்படுத்த ஐபிஎஃப் கட்சி தீவிர களப்பணி ஆற்றும்.

மக்களின் மனநிலை மாற்றமடைந்துள்ள சூழலில் இனி அங்கு தேமுவின் கொடி நாட்டப்படும். வரும் தேர்தலில் ஜெலுத்தோங் தேமு வசமாகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ லோகநாதன் இவ்வாறு கூறினார்.

இதனிடையே தேமு சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

இச்சந்திப்பில் ஐபிஎஃப் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ வேலாயுதம் இளைஞர் அணித் தலைவர் கணேஷ் , மகளிர் தலைவி திருமதி ராஜம்மா உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply