ஜேபிஜே சோதனையில் 16,337 சம்மன்கள் வெளியிடப்பட்டன

Malaysia, News

 109 total views,  1 views today

கோலாலம்பூர்-

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் சாலை போக்குவர்த்து பிரிவினர் (ஜேபிஜே) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 16,377 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி  தொடங்கி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 89,490 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்று ஜேபிஜேவின் தலைமைன் இயக்குனர் ஸைலானி ஹஷிம் கூறினார்.

சமிஞ்சை விளக்கு மீறியது, அவரச பாதையை பயன்படுத்தியது, வாகனமோட்டும்போது கைப்பேசி பயன்படுத்தியது, இரட்டை கோட்டை மீறி சென்றது, வேகக் கட்டுப்பாட்டை மீறியது ஆகிய 5 முதன்மை குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply