ஜோகூரில் பிரச்சாரத்திற்கு நள்ளிரவு வரை அனுமதி

Malaysia, News

 312 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஜோகூர் தேர்தல் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார நடவடிக்கைகளை நள்ளிரவு வரை மேற்கொள்வதற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதற்கு முன் இரவு 10.00 மணி வரை மட்டுமே பிரச்சார சொற்பொழிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நேரத்தை நள்ளிரவு வரை நீட்டிப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்.

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

Subscribe:

பக்காத்தான் தலைவர்களான தாம் உட்பட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், லிம் குவான் எங் ஆகியோர் கலந்து கொண்ட பிரதமருடனான சந்திப்பில் லிம் இவ்விவகாரத்தை எழுப்பினார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்படும் என்று பிரதமர் தெரிவித்ததாக முகமட் சாபு கூறினார்.

ஐ சேனல் செய்திகள் 1/3/2022

Leave a Reply