ஜோகூரில் பெருவெள்ளம் !

Malaysia, News

 345 total views,  2 views today

ஜோகூர் பாரு – 2 ஆகஸ்டு 2022

நண்பகல் தொடங்கி பெய்த கனத்த மழையால் சுல்தானா அமினா மருத்துவமனை உட்பட ஜோகூர் பாருவில் உள்ள முக்கியச் சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மட்டும் இல்லாமல் வெள்ளத்திலும் பல வாகனங்கள் சிக்கின.

இந்த விவகாரத்தை பொதுப் பாதுகாப்புப் படையின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, மலாயா பெமுட புத்ரி மலாயா பெர்சத்து அமைப்பின் ஜோகூர் மாநிலத் தலைவர் முகம்மட் ரித்வான் ஓத்மான் குறிப்பிடுகயில், சுல்தானா அமினா மருத்துவமனை அமைந்துள்ள ஜாலான் பெர்சியாரான் அபு பக்கார் சுல்தான் சாலையும் பாதிக்கப்பட்டது குறித்தப் புகார் தமது தரப்புக்குக் கிடைத்ததாகவும் சொன்னார்.

இதனால் மருத்துவமனைக்கு வருகை புரிவோருக்கும் நோயாளிகளுக்கும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

மேலும், நிங் சிக்கில் அமைந்துள்ள கம்போங் முகம்மாட் அமின், பட்டனத்திற்குச் செல்லும் ஜாலான் பந்தாய் லீடோ, ஜாலான் மாமோடியா, ஜாலான் ஶ்ரீ பெலாங்கி ஆகிய சாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், ஜாலான் யாஹ்யா ஆவால், ஜாலான் ஆயேர் மோலேக் ஆகிய சாலைகளும் வெள்ளத்தால் மூழிகியதாக மெட்ரோ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply