ஜோகூரில் வெள்ளம் : 3,967 பேர் பாதிப்பு !

Malaysia, News

 17 total views,  2 views today

குமரன் | 25-1-2023

இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,612இல் இருந்து 3,967 ஆக உயர்வு கண்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாகச் செயற்குழு தெரிவிக்கயில், இன்று திறக்கப்பட்ட 6 தர்காலிகத் துயர் துடைப்பு மையங்களோடு மொத்தம் 41 மையங்கள் தற்போது செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டது.

சிகாமாட் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும் அங்கு 16 துயர் துடைப்பு மையங்களில் 399  குடும்பங்களைச் சேர்ந்த 1,417 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குளுவாங் மாடவ்வட்டத்தில் 11 துயர் துடைப்பு மையங்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1,191  பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கோத்தா திங்கி : 6 துயர் துடைப்பு மையங்கள் 138 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேர் அடைக்கலம்.

மெர்சிங் : 4 துயர் துடைப்பு மையங்கள் 194 குடும்பங்களைச் சேர்ந்த 640 பேர் அடைக்கலம்.

பத்து பகாட் : 2 துயர் துடைப்பு மையங்கள் 32 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் அடைக்கலம்.

இதனிடையே. முன்னெச்சரிக்கையாக மூவாரில் 2 துயர் துடைப்பு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுத் தயார் நிலையில் இருப்பதாவௌம் கூறப்பட்டது.

சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் மிக ஆபத்தான நிலையில் பலத்த மழை பெய்யும் எனவும் தங்காக், மூவார், பத்து பகாட், பொந்தியான் ஆகியப் பகுதிகளில் இன்று அவ்வாறானச் சூழல் தொடரும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply