ஜோகூர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்தது பெண்களின் வாக்குரிமை

Malaysia, News, Politics

 257 total views,  1 views today

ஜோகூர்பாரு-

மகளிரின் வாக்குகள் இம்முறை நடக்கவிருக்கும் ஜோகூர் தேர்தலில் மிக முக்கியப் பங்காற்றும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதால் தேர்தல் நாளன்று வாக்களிக்கும் மையங்களுக்குப் பெண்கள் வருகை புரிந்து தங்களின் மக்களாட்சி கடமையை நிறைவு செய்ய வேண்டும் என ம.இ.கா. மகளிர் பணிப்படையின் தேசியத் தலைவர் கவிதா சிவசாமி தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக உலக மகளிர் நாளில் சிறப்பு நடவடிக்கைகளை மெர்சிங் தொகுதியில் மேற்கொண்ட ம.இ.கா. மகளிர் பணிப்படைக்குக் கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜோகூரின் நிலையான அரசியலோடு பெண்களின் முன்னேற்றத்தையும் தேசிய முன்னணி அரசாங்கம் தமது முக்கிய செயற்திட்டப் பட்டியலில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஈடுபட்ட பரப்புரை நடவடிக்கையின்போது 1970களில் மெர்சிங் தொகுதி ம.இ.கா. அலுவலகமாக செயல்பட்ட பழையக் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் மக்களைச் சந்தித்த போது தேசிய முன்னணிக்கும் ம.இ.கா.வுக்கும் அவர்கள் வழங்கும் ஆதரவு தொடர்ந்து நிலைத்திருப்பதைக் காண முடிந்ததாகவும் கவிதா குறிப்பிட்டார்.

பெக்கான் மெர்சிங் கெச்சில் வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த பழைய ம.இ.கா. கட்டடம் பழைய வரலாற்றுப் பூர்வச் சுவடுகளைக் கொண்டுள்ளதை அங்குள்ள மக்கள் நினைவு கூர்வதாகவும் அவர் சொன்னார்.

Leave a Reply