ஜோகூர் தேர்தல்: வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இளம் வாக்காளர்கள்?

Malaysia, News, Politics

 346 total views,  1 views today

ரா.தங்கமணி

ஜோகூர்பாரு-

நாளை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரு முனை தொடங்கி ஏழு முனை போட்டி என பலம் வாய்ந்த போட்டியாக கருதப்படும் இந்த ஜோகூர் தேர்தலில் ஆளும் அரசாங்கமாக திகழ்கின்ற தேசிய முன்னணி, தேசிய கூட்டணிக்கு பலபரீட்சையாக அமைந்துள்ளது.

அதோடு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இத்தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மலாக்கா, சரவாக் தேர்தல்களில் படுதோல்வி கண்ட கெ அடிலான் கட்சி தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இத்தேர்தலில் சொந்த சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஜசெக, அமானா, மூடா கட்சியை போட்டியிடும் நிலையில் லார்க்கின் சட்டமன்றத் தொகுதியில் கெ அடிலானை எதிர்த்து மூடா கட்சி போட்டியிடுவது இக்கூட்டணிக்கு சாதகமா? பாதகமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் 18 வயது இளம் வாக்காளர்கள் முதன் முதலாக இத்தேர்தலில் வாக்களிக்கவிருப்பதும் இத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 18 வயது இளம் வாக்காளர்களின் தேர்வாக எந்த கட்சி, எந்த சின்னம் திகழப் போகிறது என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

இளம் வாக்காளர்களின் வாக்குகளே இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பட்சத்தில் ஜோகூர் மாநில ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது தெரிந்து விடும்.

Leave a Reply