ஜோகூர் தேர்தல் 3இல் 2 பெரும்பான்மையை வெல்ல தேமு இலக்கு- பிரதமர்

Malaysia, News, Politics

 323 total views,  3 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரு பெரும்பான்மையை வெல்ல இலக்கு கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார்.

இம்முறை இம்மாநில தேர்தல் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆயினும் இம்முறை கூட்டணி கட்சிகள் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற வேண்டாம்.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கும், ஜொகூர் மந்திரி பெசாருக்கும் டத்தோஶ்ரீ ஹிஷாமுடினுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. ஆயினும் வெற்றியை நிலைநாட்ட தேர்தல் கேந்திரம் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply