ஜோகூர் மாநில வேட்புமனுத்தாக்கல் நிலவரம்

Uncategorized

 120 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ரா.தங்கமணி

வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநில தேர்தலுக்கான வேட்புமனு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள ஜோகூர் மாநில தேர்தல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் வாழ்வா- சாவா போராட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் களமாகும்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 60 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை இழந்த தேசிய முன்னணி 15ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ‘கிரீன் சிக்னலாக’ இந்த ஜோகூர் மாநிலத் தேர்தல் அமைந்துள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல், பக்காத்தன் ஹராப்பான் ஆகிய கூட்டணிகளில் சில சுயேட்சை கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கட்சியான பெஜுவாங் இத்தேர்தலில் 42 தொகுதிகளில் தமது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதிக மலாய்க்காரர்கள் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் மட்டுமே பெஜுவாங் கட்சி போட்டியிடுகிறது.
அதோடு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைந்துள்ள மூடா கட்சி, லார்க்கின் தொகுதியில் தமது வேட்பாளரை சுயேட்சையாக களமிறக்கியுள்ளது. பிகேஆருடன் நேரடி மோதலை மூடா கட்சி இதன் மூலம் எதிர்கொண்டுள்ளது.
சபாவின் வாரிசான் கட்சி 6 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
பிஎஸ்எம் கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் களமிறங்கியுள்ளார். 1999இல் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கிய பிஎஸ்எம் கட்சி முதன் முறையாக ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுகிறது.
மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் 35 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும் இரு தொகுதிகளில் 7 முனைப் போட்டியும் 4 தொகுதிகளில் 6 முனைப் போட்டியும் 8 தொகுதிகளில் 5 முனைப் போட்டியும் 7 தொகுதிகளில் மும்முனை போட்டியும் நிலவுகின்றன.
வயது முதிர்ந்த வேட்பாளராக பெரிக்காத்தான் நேஷனல்- பெர்சத்து கட்சியின் சார்பில் தோஸ்ரின் ஜர்வந்தி போட்டியிடுகிறார். அதேபோது இளம் வேட்பாளராக தேமு- மசீசவின் கெல்லி சாய், பெஜுவாங் கட்சியின் முகமட் ஐரெல் ஸப்ரிடின் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர். முறையே மெங்கிபோல், தங்காக் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இவ்விருவரும் 26 வயதுக்குட்பட்டவர்களே ஆவர்.

Leave a Reply