ஜோகூர் வெள்ளம் : 204 பேர் பாதிப்பு !

Malaysia, News

 30 total views,  2 views today

– குமரன் –

பத்து பகாட் – 15 செப் 2022

இங்குள்ள ஶ்ரீ காடிங் வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 204 பேர் பாதிக்கப்ப்பட்டுள்ளனர். இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, ஶ்ரீ காடிங் இடைநிலைப்பள்ளியில் திறக்கப்பட்டத் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் வெளியிட்ட பத்து பகாட் மாவட்ட பேரிடர் மேளாண்மை செயற்குழு தெரிவிக்கயில், தற்போது வரையில் 57 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.

நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் திறக்கப்பட்டத் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தாமான் ஶ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரி ஶ்ரீ காடின், பெக்கான் ஶ்ரீ காடிங், கம்போங் ஶ்ரீ தஞ்சோங் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கின்றனர்.

தொடர்ந்து பெய்த கனமழையாலும் அலை நிகழ்வாலும் இப்பகுதியில் வெள்ளம் எற்பட்டது. இதனால் ஶ்ரீ காடிங் அரசாங்கக் கிளினிக், ஶ்ரீ காடிங் தேசியப் பள்ளி ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply