டத்தோஶ்ரீ சரவணனுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

Malaysia, News, Politics

 277 total views,  2 views today

கோலாலம்பூர்-

பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அமைச்சரவையில் மஇகா சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பிரான டத்தோஶ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மஇகாவின் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ எம்.சரவணன் முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அமைச்சரவையிலும் மனிதவள அமைச்சராக பதவி வகித்து திறம்பட செயலாற்றி வந்தார்.
தற்போது மீண்டும் துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள டத்தோஶ்ரீ சரவணனுக்கு மஇகாவினரும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தமது முகநூல் வாயிலாக டத்தோஶ்ரீ சரவணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
‘மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் முன்னெடுப்புகளால் மலேசியத் தமிழர்களின் வாழ்வு சிறக்கட்டும்’ என்று நடிகர் கமல்ஹாசன் தமது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
டத்தோஶ்ரீ சரவணன் அரசியலில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், மொழி ஆகியவற்றிலும் திறம்பட்ட மனிதர் என்பதை அனைவரும் அறிவர்.

Leave a Reply