டத்தோஶ்ரீ சரவணனுடனான உறவை தாப்பா அம்னோ தொடரும்

India, News

 143 total views,  1 views today

தாப்பா-

நடப்பு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை அம்னோ எடுத்துள்ள போதிலும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுடனான உறவு வழக்கம்போல் தொடரும் என்று தாப்பா அம்னோ கூறியுள்ளது.
தாப்பா தொகுதி அம்னோ கட்சியின் உச்சமன்ற முடிவை மதிக்கிறது. அதே வேளையில் டத்தோஶ்ரீ சரவணனுடனான உறவில் எவ்வித மாற்றமும் இல்லை என அம்னோ தாப்பா தெரிவித்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிப்பதில்லை என்று அம்னோ முடிவெடுத்துள்ள நிலையில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறியிருந்தார்.

Leave a Reply