டத்தோஸ்ரீ அன்வாரின் கரங்களை வலுபடுத்தும் அமைச்சரவை வேண்டும்

Malaysia, News, Politics

 156 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் 10ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் டத்தோஸ்ரீ அன்வார் அடைந்துள்ள இந்த வெற்றி மலேசியர்களின் வெற்றியாக பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்களான ஜசெகவைச் சேர்ந்த கோபி முனியாண்டி, பிகேஆரைச் சேர்ந்த David , அமானாவைச் சேர்ந்த அருள் நேசன், ஆகியோர் தெரிவித்தனர்.

பிரதமர் பதவிக்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவை மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

சிறந்த தலைமைத்து ஆற்றலும் ஆக்ககரமாக செயல்படக்கூடியவரும் டத்தோஸ்ரீ அன்வாரின் கரத்தை வலுப்படுவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது அவசியமாகும்.

YB கணபதிராவுடன் கோபி

அதனடிப்படையில் கிள்ளான் நாடாளுமனறத் தொகுதியில் போட்டியிட்டு அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்ற கணபதிராவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து சிறந்த சேவையாற்றி வரும் கணபதிராவ் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரே.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் கணபதிராவ் இம்மாநிலத்தில் ஆக்ககரமான திட்டங்களை வகுத்துள்ளார்.

இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி உதவிநிதி, பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணம், இந்திய சிறு வணிகர்களுக்கான ஐ சீட் பிரிவு, குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சினைக்கு தீர்வு மை செல் பிரிவு, இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு உதவ இந்திய சமூகத் தலைவர்கள் போன்றவற்றை உருவாக்கி சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் சிறக்கச் செய்தவர் கணபதிராவ்.

ஆட்சிக்குழு உறுப்பினராக கணபதிராவ் வகுத்த திட்டங்கள் இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பயனளித்து வருகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் நாங்கள் அடையும் பயனை கணபதிராவ் அமைச்சரானால் மலேசியர்கள் அனைவரும் அடைவர்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைக்கவுள்ள அமைச்சரவையில் கணபதிராவுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்தியர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் ஆக்கபூர்வமானதாக அமைந்திடும் என்று நம்புவதாக இந்திய சமூகத் தலைவர்களும் மாநகர் மன்ற உறுப்பினர்களும் கருதுகின்றனர்.

Leave a Reply