டத்தோஸ்ரீ சரவணனுக்கு போட்டியா?; அது மஇகாவுக்கே பின்னடைவு – ஸ்ரீ முருகன்

Malaysia, News

 585 total views,  2 views today

தெலுக் இந்தான்

மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு போட்டி ஏற்படக்கூடாது என்று மஇகா இளைஞர் பிரிவு மத்திய செயலவை உறுப்பினர் ஶ்ரீ முருகன் வலியுறுத்தினார்.

இன்று மஇகாவின் சார்பில் உள்ள ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஶ்ரீ சரவணன் மட்டுமே உள்ளார். அதோடு நடப்பு அரசாங்கத்தில் மனிதவள அமைச்சராகவும் அவர் பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், செயலவை உறுப்பினர்கள் ஆகியவை அடங்கிய மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்காது என்றே இதற்கு முன் கணிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நடப்பு சூழலில் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்து  வருகின்றனர். மஇகாவில் முக்கிய தலைவர்களாக இருப்பவர்களை சிலர் தூண்டி விட்டு துணைத் தலைவர் பதவியில் போட்டியிடுங்கள் என்று களத்தில் இறக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் டத்தோஸ்ரீ சரவணன் போட்டியில்லாமல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அமைச்சரவையில் இருக்கும் ஒரே இந்திய தலைவரான சரவணனை மஇகா தேர்தலில் தோல்வியடையச் செய்தால் அது மஇகாவுக்கு பின்னடைவாக அமையலாம்.

கட்சி, சமுதாயம் என்று எந்நிலையிலும் சீர்தூக்கி பார்த்து செயலாற்றக்கூடிய தலைவராக சரவணன் தன்னை மெய்பித்து வந்துள்ளார். மஇகாவில் தலைமைத்துவமிக்க தலைவராக உருவெடுத்து வரும் சரவணன் அரசியல் மட்டுமல்லாது இலக்கியம், ஆன்மிகம் என எதிலும் சளைத்தவர் இல்லை என்பதை அனைவரும் அறிவர், அதே வேளையில் மனிதவள அமைச்சராக சிறப்பாக செயலாTற்றுபவர் என்று டத்தோஸ்ரீ சரவணனை நிதியமைச்சரே பாராட்டியுள்ளார். இத்தகைய செயலாற்றல்மிக்க தலைவருக்கு மஇகா தலைவர்கள் அரணாக இருக்க வேண்டும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது போல் டத்தோஸ்ரீ சரவணனும் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து ரீதியிலான கிளை, தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் டத்தோஸ்ரீ சரவணனுக்கு முழுமையான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று ஸ்ரீ முருகன் குறிப்பிட்டார்.

Leave a Reply