டத்தோ மோகன், டத்தோ முருகையா முன்னிலை?

Malaysia, News, Politics

 352 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நடந்து முடிந்துள்ள மஇகா தேர்தலில் புதிய உதவித் தலைவர்களாக செனட்டர் டத்தோ டி.மோகன், டத்தோ தோ. முருகையா, மஇகா செயலாளர் டத்தோ அசோஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.


2021-2024 வரையிலான புதிய செயலவையினருக்கான தேர்தல் நடைபெற்ற வேளையில் டத்தோ டி.மோகன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று முன்னிலை வகிப்பதாகவும் அவருக்கு அடுத்த நிலையில் டத்தோ முருகையாவும் டத்தோ அசோஜனும் அணி வகுக்கின்றனர்.


இத்தேர்தலில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டத்தோ சி.சிவராஜ் தோல்வி கண்டிருப்பதாகவும் அதோடு இத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.கே.ராமலிங்கம், குணாளன் ஆகியோரும் தோல்வி கண்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

இன்னும் சில மணிநேரங்களில் இத்தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவிக்கவுள்ளார்.

Leave a Reply