டத்தோ ராமச்சந்திரன் மீது தாக்குதல்; பேராசிரியர் ராமசாமி, டேவிட் மார்ஷலிடம் போலீஸ் விசாரணை

Crime, Malaysia, News

 430 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

புக்கிட் மெர்தாஜம்

பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் டத்தோ ராமச்சந்திரன் பாராங்கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்லும் போது அடையாளம் தெரியாத 4 நபர்களால் டத்தோ ராமசந்திரன் கடுமையாக தாக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோ ராமசந்திரனின் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது.

Leave a Reply