டத்தோ ஸ்ரீ மு சரவணனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி 2022

Malaysia, News

 51 total views,  1 views today

கோலாலம்பூர் – 23/10/2022

மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உற்றார், உறவினர், நண்பர்களோடு ஒன்றாகக் கூடித் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். பண்பாடுகளைப் பேணிக்காத்துத், தீபத்திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம்.

அசுரனை அழித்து ஆனந்தமான சூழலை உருவாக்கியதுபோல், நமது துன்பங்களும், ஏக்கங்களும் தீர சரியான தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நமது கையில். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் சிந்தித்துச் செயல்பட்டால் நாளைய விடியல் நமது கையில்.

தேர்தல் காலங்களில் மட்டும் உழைக்கும் கட்சியல்ல ம.இ.கா. தொடர்ச்சியாக மலேசிய இந்தியர்களின் குரலாக ஒளித்துக் கொண்டிருப்பதும், உதவிகளை வழங்கிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே. ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவும் கிடைத்தால்தான் பலமான கட்சியாக வலுப்பெற முடியும். அப்போதுதான் நமது தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருமித்த குரலில் முன் வைக்க முடியும்.

ஒற்றுமையே பலம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். நல்லதொரு விடியலை நோக்கிப் புறப்படுவோம். நிலையான அரசாங்கத்தால் மட்டும்தான் மலேசியர்களுக்கு நன்மைகளைக் கொண்டு வர முடியும்.  ஆகவே அரசியல் நிலைத்தன்மை என்பது மிகமிக அவசியம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு – குறள் 423

நாட்டின் சூழல், அடுத்தத் தலைமுறையின் எதிர்காலம், நிலையான அரசியல் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, சரியான முடிவை மலேசிய இந்தியர்கள் எடுக்க வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

கடலளவு கிடைத்தாலும் மயங்க வேண்டாம்
அது கையளவே ஆனாலும் கலங்க வேண்டாம்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் – இதை
உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும்

மீண்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Leave a Reply