டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளி பரிசளிப்பு விழா: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பங்கேற்பு !

Education, Indian Student, Malaysia, Malaysia, News

 130 total views,  1 views today

இரா. தங்கமணி

சுங்கை சிப்புட் – 29 செப் 2022

அண்மையில் இங்குள்ள சுங்கை சிப்புட் டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஇகா தேசியத் தலைவரும் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிற்பபாளராக கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உரையாற்றிய அவர், 2020,2021ஆம் ஆண்டுகளில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

அதோடு, பள்ளியின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வெ.70,000 வழங்கிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இதற்கு முன்பு பள்ளி முதல்வரிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வெ.20,000 வழங்கியதோடு எஞ்சிய தொகையை 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வழங்கப்படும் என கூறினார்.

Leave a Reply