டாக்டர் ஜெயகுமாருக்கு போட்டியிட வாய்ப்புள்ளதா?

Malaysia, News, Politics

 35 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் போட்டியிடுவது தொடர்பான முடிவை அக்கூட்டணி விரைவில் அறிவிக்க வேண்டும் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் பிஎஸ்எம், மூடா ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டன. ஆனால் இன்னமும் முடிவை அறிவிக்காமல் பிஎச் கூட்டணி காலதாமதம் செய்கிறது.

காலம் தாழ்த்திக் கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை. கூடிய விரைவில் அக்கூட்டணி தமது முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தலைவரை எதிர்கொள்ள டாக்டர் ஜெயகுமார் சிறந்த வேட்பாளர் என்றே நாங்கள் கருதுகிறோம் என்று அவர் சொன்னார்.

விளம்பரம்:

Leave a Reply