டான்ஶ்ரீ சுப்ராவின் நல்லுடலுக்கு நஜிப், அன்வார் இறுதி அஞ்சலி

Malaysia, News, Politics

 185 total views,  1 views today

பெட்டாலிங் ஜெயா-

மறைந்த  மஇகாவின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான டான்ஶ்ரீ எஸ்.சுப்பிரமணியத்தின் நல்லுடக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 11 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட டான்ஶ்ரீ சுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் தமது இல்லத்தில் காலமானார்.

அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.

டான்ஶ்ரீ சுப்ராவின் நல்லுடலுக்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தம்பதியர், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஜி தம்பதியர், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் தம்பதியர், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உட்பட ம இகாவினரும் அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

டான்ஶ்ரீ சுப்ராவின் மறைவுக்கு பேரரசர் தம்பதியர், பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி,ம இகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply