டான்ஶ்ரீ விக்கியின் தலையீடு; சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி விரைவில் முழுமை பெறும்

Malaysia, News

 321 total views,  4 views today

சுங்கை சிப்புட்-

இங்கு நிர்மாணிக்கப்பட்டு வந்த சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியின் எஞ்சிய 10 விழுக்காடு கட்டுமானப் பணி மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலையீட்டால்  கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று அப்பள்ளியின் வாரியக்குழு தலைவர் முனைவர் எஸ்.சண்முகவேலு தெரிவித்தார்.

இந்த தொகுயில்  தனது சேவை மையத்தை தொடங்கிய  ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ.விக்னேஸ்வரனின் நேரடி கவனத்திற்கு இப்பள்ளியின் விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது.

அப்பள்ளி நிர்மாணிப்பு பணி தேக்கத்திற்கு காரணத்தை கண்டறிந்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அது தொடர்பாக கல்வி இலாகா அதிகாரிகளை சந்திக்க ஏற்பாட்டை செய்ததுடன் விரைவில் தேங்கியுள்ள பணிகளை தொடங்கவும் முழு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

ஒரு சிலருக்கு பள்ளியில் தேங்கியுள்ள பணிளை நிறைவு செய்ய எந்த வகையில் பள்ளி வாரியக் குழு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்று ஒவ்வொரு முறையும் பத்திரிக்கைகளில் அறிக்கைகளை வெளியிடுவது முறையான நடவடிக்கையாக  இருக்காது என்று கருதினோம்.

இதற்கிடையில் ஒரு சிலர் அப்பள்ளியின் மீது யாரும் நடவடிக்கை எடுக்காதது போன்ற தகவல்களை பரப்பி வருகிறார்கள். இப்பள்ளிக்கு விடிவுக்காலம பிறந்திறக்கிறது என்றால் அது விக்னேஸ்வரன் வந்த பிறகுதான் என்று சண்முகவேலு திட்டவட்டமாக கூறினார்.

இப்பள்ளியில்  துணை மின் நிலையத்தை நிர்மாணிக்க இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படை பணிகளையும் விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் தீர்வுக்காண உள்ளது. இதற்கான ஆவணங்கள் சமர்பிக்கபட்டுள்ளன.  தெனாகா நேஷனல் அங்கீகாரத்திற்கு காத்துள்ளோம் , அதன் பின்னர் கூடிய விரைவில் இக்கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் என்று சண்முகவேலு கூறினார்.

Leave a Reply