டிரெண்டிங்கில் நஜிப் !!!

Malaysia, News, Politics

 269 total views,  1 views today

கோலாலம்பூர் – 23 ஆகஸ்டு 2022

தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிகில் உள்ளார் நஜிப். ஊழல் வழக்கு நிறைவடைந்து தண்டனையை மேற்கொள்ள காஜாங் சிறைக்கு நஜிப் செல்லுகின்ற வேளையில், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் நஜிப் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது போன்ற படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

நஜிப் : ஆட்டம் முடிந்தது
Najib: Game Over

நஜிப்பின் சிறைத் தண்டனை விடுதலை நாளுக்கான சிறப்புப் பரிசு எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

அதே வேளையில், நஜிப்பின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்தும் வருகின்றனர்.

நாட்டின் நீதித்துறை நேர்மையற்று இருப்பதாகவும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு நஜிப் பலியாக்கப்பட்டுள்ளார் எனவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

நஜிப் வாழ்க !
Hidup Najib.

நஜிப் பொறுமை கொள்ள வேண்டும். இறைவர் என்றும் உங்களுடன் இருப்பார்.
Takdir Yg Terindah, menyeru Najib supaya bersabar kerana Allah sentiasa bersama.

போராட்டம் நிச்சயம் தொடரும் எனவும் அவர் செய்த நல்ல காரியங்கள் என்றும் நினைவில் கொள்ளப்படும் எனவும் பதிவிட்டு வர்கின்றனர்.

Leave a Reply