டிரேலரை மோதிய விரைவு பேருந்து; பயணிகள் காயம்

Malaysia, News

 132 total views,  2 views today

குவாந்தான் –

விரைவு பேருந்து ஒன்று டிரேலர் லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகளும்  பேருந்து ஓட்டுனரும் காயமடைந்தனர்.

நேற்று மாலை 4.40 மணியளவில் பகாங், தெமர்லோ அருகே கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 132.5ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தின்போது இரு வாகன்ங்களும் குவாந்தானில் இருந்து கோலாலம்பூரைச் சென்று கொண்டிருந்தன.

அப்போது விரைவு பேருந்து சாலையின் இடது புறத்திலிருந்து வலப்புறம் திரும்ப முற்பட்டபோது  கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுக் கொண்டிருந்த டிரேலர் லோரியுடன் மோதியதாக நம்பப்படுகிறது.

இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சிறு காயங்களுக்கு இலக்கானதாக பகாங் மாநில போக்குவரத்து புலனாய்வு துறையின் தலைவர் கமருல்ஸமான் ஜூசோ தெரிவித்தார்.

Leave a Reply