டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும்- எலான் மஸ்க் எச்சரிக்கை

News, World

 234 total views,  1 views today

வாஷிங்டன்:

டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், மற்றும் தரவுகளை தர தவறினால் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை.

டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காத வரையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டர் நிறுவனம் போலி கணக்கு விவரங்களையும், தரவுகளையும் தர தவறினால் ஏற்கனவே அறிவித்துள்ளபடி டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தலிருந்து விலக நேரிடும் என்று எச்சரித்தார்.

Leave a Reply