தஞ்சோங் மாலிமில் தேர்தல் பரப்புரைப் பலகையில் சிவப்புச் சாயம் ! விசாரணை கோரி காவல்துறையில் புகார் !

Crime, Malaysia, News, Politics, Polls

 201 total views,  1 views today

– குமரன் –

சிலிம் ரிவர் – 16/11/2022

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக இத்தொகுதியைத் தக்கவைக்கக் களத்தில் இறங்கியுள்ள சாங் லி காங்கின் தேர்தல் பரப்புரைப் பலகையில் சிவப்புச் சாயம் வீசப்பட்டச் சம்பவம் குறீத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக்கு முந்தைய ஒரவு நடந்ததாக அறியப்படும் இச்சம்பவம் குறித்து கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் சாங் லி காங். இஃது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை எனக் கூறிய அவர் இது குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்படக் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது போன்ற அநாகரிகமான செயல் நடந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் விசாரணை நடத்தப்பட்டு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்,

அதே சமயம், பேராங் சட்டமன்றத் தொகுதியில் களம் இறங்கியுள்ள நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கைரோல் நஜிப் கூறுகயில், தமது பரப்புரைச் சுவரொட்டிகளை இங்குள்ள மக்களின் வாகனங்களில் உறுதியானப் பசையைக் கொண்டு ஒட்டி இருப்பதைக் கண்டித்து தமது கண்டனத்தைத் தெரிவித்தார்.

இதனால், பலரின் வாகங்கள் சேதமடைந்திருப்பதாக கூறிய அவர் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை இருப்பதாகவும் சொன்னார்.

அருகில் இருக்கும் வணிகத் தளத்தின் மறைகாணி – CCTV பதிவு கிடைத்திருப்பாதாகவும் அதிகாலை 1.00 மணி அளவில் சில ஆடவர்கள் இத்தகாதக் காரியத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்ப்பிட்டனர்.

Leave a Reply