தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு

Malaysia, News

 314 total views,  3 views today

சிங்கப்பூர்-

நாளை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருந்த மலேசிய பிரஜையான தட்சிணாமூர்த்தி காத்தையாவின் தண்டனையை ஒத்திவைக்க சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்தது.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 36 வயதான தட்சிணாமூர்த்தி தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் அரசின் நடவடிக்கையை எதிர்த்து தட்சிணாமூர்த்தி செய்துள்ள மேல் முறையீட்டிற்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் பிரதிநிதிக்காத நிலையில் அவரே தனக்கான வழக்கை வாதிடுகிறார்.
இதனிடையே, தட்சிணாமூர்த்தியின் மேல் முறையீட்டில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதித்துள்ளது என்று மனித உரிமை வழக்கறிஞர் எம்.ரவி தெரிவித்தார்.
தட்சிணாமூர்த்தியின் மேல் முறையீடு இம்மாதம் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 2011இல் 44.96 கிராம் diamorphine போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக 2015இல் தட்சிணாமூர்த்திக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply