தந்தையாக இருந்து வழிநடத்திய வழிகாட்டி ! – தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

Malaysia, News, Politics

 55 total views,  2 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 15 செப் 2022

துன் ச.சாமிவேலுவை ஒரு தலைவராகவே அனைவரும் அறிந்திருப்பர், ஆனால் எங்களை சிறந்த முறையில் வழிநடத்தியதில் ஒரு தந்தையை போன்றே துன் சாமிவேலு திகழ்ந்தார் என்று மஇகாவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

துன் சாமிவேலு நாட்டுக்கும் கட்சிக்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறந்து விட முடியாது. அனைவராலும் நேசிக்கப்படுபவராகத் திகழ்ந்த துன் சாமிவேலுவின் நினைவுகள் என்றென்றும் கூறப்படும்.

நமது நேசத்திற்குரிய தலைவரின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் முகநூல் பக்கத்தில் பதவிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

Leave a Reply