தந்தை பெரியார் சொற்போர்ப் போட்டி

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Politics, Special News, World, World

 117 total views,  1 views today

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்
வழங்கும்

தந்தை பெரியார் சொற்போர்ப் போட்டி

பக்கல் :
17/09/2022 & 25/09/2022

நேரம் :
10:00 காலை – 04:00 மாலை

தளம்
மெய்நிகர் (விரிவலை) &
தான் சிறீ இடத்தோ கே.ஆர். சோமா அரங்கம், கோலாலம்பூர்

பொது விதிமுறைகள்

 1. 1.       இந்தப் போட்டியில் பொது உயர்க் கல்விக்கூடம், தனியார் உயர்க் கல்விக்கூடம், ஆசிரியர் பயிற்சிக் கழகம், தொழிற் கல்விக்கூடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மாணவர்ப் பிரிவிலும் பொது மக்கள் பொதுப் பிரிவிலும்  பங்கேற்க இயலும்.

இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் மட்டுமே பங்கெடுக்க இயலும் என்பதால் முதலில் பதியும் 10 அணிகளுக்கு மட்டுமே முதல் உரிமை வழங்கப்படும்.

இப்போட்டிக்கான பரிசுத் தொகை :

முதல் நிலை                      : ம.வெ(RM) 1500

இரண்டாம் நிலை           : ம.வெ(RM) 1000

மூன்றாம் நிலை             : ம.வெ(RM) 500

 • 18-24 அகவைக்கு உட்பட்ட மாணவர்கள் மாணவர்ப் பிரிவிலும், 25-30 அகவைக்கு உட்பட்டவர்கள் பொதுப் பிரிவிலும் பங்கேற்க இயலும். ஆகவே, அகவை மூலம் இந்தப் பிரிவுகளின் நுழையீடு நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், 25-30 அகவைக்கு உட்பட்டவர்கள் பொது உயர்க் கல்விக்கூடம், தனியார் உயர்க் கல்விக்கூடம், ஆசிரியர் பயிற்சிக் கழகம், தொழிற் கல்விக்கூடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களாக இருந்தால் அவர்கள் மாணவர்ப் பிரிவில் பங்கேற்க இயலும்.  ஆனால், தங்கள் சக அணியினரும் ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களாக  இருக்க  வேண்டும்.
 • மாணவர்ப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவாக இருப்பினும் போட்டி இரு பிரிவினரையும் இணைத்தே நிகழ்த்தப்படும்.
 • 6.       மாணவர்ப் பிரிவில் இணைவோர் அவர்தம் அணியினர் ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களாக  இருக்க  வேண்டும்.
 • ஓர் அணியில் 3 பேச்சாளர்கள் அமைத்தால் போதுமானது. தேவையெனில் 4ஆம் பேச்சாளராய் ஓர் இருப்பு நிலைப் பேச்சாளரை அவ்வணி ஏற்படுத்திக் கொள்ளலாம். 
  • முதல் பேச்சாளர்  
  • இரண்டாம்  பேச்சாளர்
  • மூன்றாம்   பேச்சாளர்
  • நான்காம் பேச்சாளர் (இருப்பு நிலைப் பேச்சாளர்)
 • முன் அறிவிப்பு இன்றி பதிவில் இல்லாத வேறு போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  
 • முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பேச்சாளராகப் பதிவு செய்யும் நபர்கள் தத்தம் இருப்புகளைப் போட்டியின் இறுதி வரை மாற்றிக் கொள்ளக்கூடாது.
 • 10.   பங்கேற்பாளர்கள் தங்களது அடையாள அட்டையின் படியும் கல்விக் கூடத்தின் மாணவர் அட்டையின் படியும் பதிவுப் படிவத்துடன் இணைத்து ‘படவுரு(PDF)’ முறையில் பதிய வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் அணி போட்டியில் பங்கு பெற முடியாது.
 • இச்சொற்போருக்கான முதல் சுற்றிலிருந்து அரை இறுதிச் சுற்று வரையிலான தலைப்புகள் யாவும் போட்டி நிகழ இரண்டு வாரம் முன்பே அறிவிக்கப்படும். இறுதிச் சுற்றுக்கான தலைப்பு போட்டி நாளுக்கான ஓரிரு நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்.
 • குலுக்கல் அடிப்படையிலேயே, ஒட்டி மற்றும் வெட்டிப் பேசும் அணி தேர்ந்தெடுக்கப்படும்.   
 • இப்போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய விரும்புவோர் 01/08/2022-ஆம் நாளில் இருந்து 15/08/2022-ஆம் நாள் வரை பதியலாம். https://forms.gle/niyDzTN65oH4RdLGA (பதிவுக்கான கூகொள் படிவம்)
 • இப்போட்டியில் பதிவு பெற ஓர் அணி ம.வெ(RM) 30-யைப் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே, அணிகள் கூகொள் படிவத்தில் பதிய முடியும்.
 • அணிகள் கூகொள் படிவத்தில் பதிவு செய்யும் பொழுது, கட்டணப் பற்றுச்சீட்டை இணைத்துப் பதிய வேண்டும். 

கட்டண விளத்தம்:

வைப்பக உரிமைப் பெயர்PERTUBUHAN PERIKEMANUSIAN THIRAVIDAR KAZHAGAM MALAYSIA
வைப்பகச் சேவையின் அடையாள எண்512343654288
வைப்பக வகைப் பெயர்MAYBANK BERHAD
 1. இந்தச் சொற்போரில் கலந்து கொள்ளும் பேச்சாளர்களின் ஆடை பின்வருமாறு:
ஆண்பெண்
வேட்டி / துகிலம் (ஜிப்பா)புடைவை

விதிமுறைகளும் வரையறைகளும்

 1. ஓர் அணி மூன்று பேச்சாளர்களைக் கொண்டிருந்தால் போதுமானது. அணிக்குத் தேவையெனில் நான்காம் பேச்சாளராய் இருப்பு நிலைப் பேச்சாளர் ஒருவரை அமைத்துக் கொள்ளலாம். ஒரு சுற்றில், ஓர் அணியிலிருந்து மூன்று பேச்சாளர்கள் மட்டுமே அளவையாட இயலும். ஒரு சுற்றில் எதிர் எதிரே இரு அணிகள் போட்டியிடுவர்.
 • ஓர் அணியில் இருப்பு நிலைப் பேச்சாளராய் நான்காம் பேச்சாளர் இருப்பின், அவர் மட்டுமே வேறு பேச்சாளர்களின் இருக்கைக்கு மாற்றிக் கொள்ள இயலும் ஒழிய மற்ற பேச்சாளர்களால் தத்தம் இருக்கைகளை மாற்றிக் கொள்ள இயலாது.
 • 03/09/2022 ஆம் பக்கல் வழங்கப்படும், 3 தலைப்புகள் தகுதிச் சுற்று முதல் அரை இறுதிச் சுற்று வரை பயன்படுத்தப்படும். இறுதிச் சுற்றுக்கான தலைப்பு, போட்டி நாளுக்கான ஓரிரு நால்களுக்கு முன் வழங்கப்படும். போட்டியாளர்கள் வழங்கப்பட்ட 3 தலைப்புகளுக்கும் ஒட்டி-வெட்டி தயாராகுதல் வேண்டும்.
 • 17/09/2022 ஆம் நாள் இயங்கலை வாயிலாக தகுதிச் சுற்றுமுதல் அரை இறுதிச் சுற்று வரை நடைபெறும். இறுதிச் சுற்றானது தான் சிறீ இடத்தோ கே.ஆர். சோமா அரங்கம், கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யவுள்ள சமூகநீதி நாள் விழைவில் அரங்கேறி, போட்டி ஒரு முற்றைப் பெறும்.
 • முதலாம் பேச்சாளர் அளவையாட 6 நிமையங்கள் வழங்கப்படும். 5-ஆவது நிமையத்தில் ஒரு முறையும் 6-ஆவது நிமையத்தில் 2 முறையும் மணியோசை எழுப்பப்படும்.
 • இரண்டாம், மூன்றாம் பேச்சாளர்கள் அளவையாட 5 நிமையங்கள் வழங்கப்படும். 4-ஆவது நிமையத்தில் ஒரு முறையும் 5-ஆவது நிமையத்தில் 2 முறையும் மணியோசை எழுப்பப்படும்.
 • அணியின் ஒட்டுமொத்த அளவையாட்டங்களைத் தொகுத்து வழங்க ஒவ்வோர் அணிக்கும் 3 நிமையங்கள் வழங்கப்படும். 3 பேச்சாளர்களில் யாரேனும் ஒருவர் தம் அணியின் கருத்துகளைத் தொகுத்து வழங்கலாம். அளவையாட்டங்களின் தொகுப்பை அணியம் செய்ய நேரம் வழங்கப்படாது. இறுதிச் சுற்றுக்கு மட்டும் தொகுப்பை அணியம் செய்ய 1 நிமையம் வழங்கப்படும்.
 • அளவையாட்டத்தின் போது இணையச் சிக்கல் அல்லது நுட்பவியல் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றுக்குத் தீர்வு கண்டு மீண்டும் இணைவதற்கு 3 நிமையங்கள் வழங்கப்படும். ஒரு பேச்சாளருக்கு ஒரு முறை மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும்; இவ்வாய்ப்பைப் பயன்படுத்திடத் தவறினால் அப்பேச்சாளர் நீங்கலாகப் போட்டி தொடரப்படும்.
 • பேச்சாளர்கள் போட்டியின் போது தங்களின் வலைப்படவியைக் கட்டாயம் இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒலிவாங்கியைப் பேசும்பொழுது இயங்கு நிலையிலும் மற்ற நேரங்களில் முடக்கியும் வைத்திருக்க வேண்டும். இதைக் கடைபிடிக்கத் தவறும் பேச்சாளரை மெய்நிகர் அவையிலிருந்து நீக்க ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
 • பேச்சாளர்கள் விரிவலையில் தங்களின் அணிப் பெயர் பின் கீழ்க்கோடு இட்டு பேச்சாளர் பெயர் என அமைக்க வேண்டும். பேச்சாளர்களின் பெயர் தமிழ் எழுத்தில் இருத்தல் வேண்டும். எ.கா: ‘UMT_நெடுஞ்சுடர்’ / ‘பொது1_செங்குட்டவன்’. இதைப் பற்றிய மேல் விளக்கவுரை 10/09/2022ஆம் பக்கல் வழங்கப்படும்.
 • கொடுக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வழங்கப்படும் அளவையாட்டங்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட மாட்டா.
 • பேச்சாளர்கள் சான்றுகளைப் பேச்சின் ஊடாக வழங்க வேண்டும்; மெய்நிகர் அவையில் திரைப் பகிர்வின் வாயிலாகக் காட்சிப்படுத்த வேண்டியதில்லை.  
 • போட்டியாளர்கள் முன் வைக்கும் அரசியல், மதம், இனம் சார்ந்த கருத்துகள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இருக்கக்கூடாது. மேலும் பிறரை இழிவுபடுத்தும்படியோ, மனதைப் புண்படுத்தும்படியோ கருத்துகளை வெளிப்படுத்தக்கூடாது.
 • நடுவர்களின் முடிவே இறுதியானது. போட்டியின் முடிவு குறித்து எழும் எவ்வித நிறைவின்மையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. போட்டியாளர்களுக்குப் போட்டியின் நடையில் மன நிறைவின்மை இருப்பின் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தெரியப்படுத்தல் வேண்டும். 
 • பொது விதிமுறைகளையும் போட்டி விதிமுறைகளையும் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி மாற்றம் செய்வதற்கு ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
 • போட்டியின் விதிமுறைகளுக்கு இணங்காத அணிகளைத் தகுதி நீக்கம் செய்வதற்கு ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு..
 • 25/09/2022 ஆம் நாள் தான் சிறீ இடத்தோ கே.ஆர். சோமா அரங்கத்திற்கு வருகை புரிவோருக்கு மட்டுமே சான்றிதழும் நினைவுக் கோப்பைகளும் வழங்கப்படும்.
மதிப்பெண் கூறுகள்
கருத்து30
அளவையாட்டத்திறன் (வாதத்திறன்)30
மொழி20
படைப்பு20
தொகுப்பு10

புள்ளி விளக்கம்

  கருத்து (30 புள்ளிகள்)    கருத்து          
துணைக்கருத்து          
மேல் விளக்கம்          
எடுத்துக் காட்டு          
நடைமுறை ஒப்பீடு
  முதல் பேச்சாளர் தலைப்பு விளக்கம் செய்ய வேண்டும்.   ஒரு பேச்சாளர் குறைந்தது இரண்டு கருத்துகளை  முன்வைக்க வேண்டும்.   கூடுதலாக மூன்று கருத்துகளை முன் வைக்கலாம்.   இரண்டு கருத்துகள் எனில் ஒவ்வொன்றுக்கும் 15 புள்ளிகள் ஒதுக்கப்படும்.   மூன்று கருத்துகள் எனில் ஒவ்வொன்றுக்கும் 10 புள்ளிகள் ஒதுக்கப்படும்.   தலைப்புக்குப் பொருந்திய அல்லது தொடர்புடைய முகமைக் கருத்தை முன்வைக்க வேண்டும்.   முகமைக் கருத்துக்குரிய  துணைக் கருத்துகளை வரிசைப்படுத்தி மேல் விளக்கம் செய்ய வேண்டும்.   ஏற்ற எடுத்துக் காட்டுகளையோ நடைமுறை ஒப்பீட்டையோ வழங்க வேண்டும்.
  அளவையாட்டத் திறன் (30 புள்ளிகள்)  கருத்து மறுத்தல்      
கருத்து முறித்தல்      
கருத்து நிறுவல்    
வெட்டிப் பேசும் திறனுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும்.   தம் நிலைப்பாட்டை நிறுவும் திறனும் எதிர் கருத்தை முறிக்கும் திறனும் கவனிக்கப்படும்.   தலைப்பைத் தம் வயப்படுத்தும் ஆற்றல் கருத்தில் கொள்ளப்படும்
  மொழிவளம் (20 புள்ளிகள்)    சொல்வளம்          
மொழியாளுமை          
பலுக்கல்          
மொழியணிகள்      
    பேச்சு வழக்கில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.   பேச்சின் சுவையைக்  கூட்ட அவ்வப்பொழுது வழக்கு மொழியைக் கையாளலாம்.   வடமொழி – ஆங்கிலம் போன்ற பிறமொழிக் கலப்பைத் தவிர்த்து,  தூய தமிழில் பேச  வேண்டும்.   அறிவியல் – நுட்பவியல் சார்ந்த  ஆங்கிலச் சொற்களை  ‘அவையோர் அனுமதியுடன்’ என்று சொல்லிப் பயன்படுத்தலாம்.   லகர, ளகர, ழகர – நகர, னகர, ணகர – ரகர, றகர பலுக்கல் தெளிவாக இருக்க வேண்டும்.   பேச்சின் சுவையைக் கூட்ட மொழி அணிகளைப் பயன்படுத்தலாம்.  
  படைப்பு (20 புள்ளிகள்)    தொனி          
சரளம்          
ஈர்ப்பு        
படைப்பாளுமை
  பேச்சு, தகுந்த ஏற்ற இறக்கத்தோடு இருக்க வேண்டும்.   தகுந்த உணர்ச்சிகளைப் பேச்சின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும்.   தடுமாற்றமின்றி கோர்வையாகப் பேச வேண்டும்.   குறிப்புகளின் துணைகொண்டு பேசலாம்.  இருப்பினும் முழுமையாகக் குறிப்பினைப் பார்த்து வாசித்தால் மொத்தப் புள்ளிகளிலிருந்து பாதிப் புள்ளிகளே வழங்கப்படும்.   அவை மாண்பைக் கருத்தில் கொண்டு முறையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.   மேடைப் பேச்சுக்குரிய ஆளுமை இருக்க வேண்டும்.  
  தொகுப்பு (10 புள்ளிகள்)  கருத்துகளை வரிசைப்படுத்தும் பாங்கு        
தொகுத்து வழங்கும் திறன்
  தம் அணிப் பேச்சாளர்கள் முன் வைத்த கருத்துகளை வரிசைப்படுத்திச் சுருக்கமாகத் தொகுத்து வழங்க வேண்டும்.   தொகுப்புரையில் எதிர் தரப்புக் கருத்துகளை மறுத்துப் பேசவோ அல்லது புதிய கருத்துகளை முன் வைக்கவோ கூடாது.

தகுதிச் சுற்று

 • இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறவுள்ளன.
 • கூகொள் படிவத்தில் பதிவு செய்துள்ள வரிசைக்கேற்ப பங்கேற்கும் அணிகள் பட்டியிலிடப்பட்டு 17/09/2021 -ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு விரிவலையில் வெளியிடப்படும். 
 • இந்தத் தகுதிச் சுற்றில் அதிகப் புள்ளிகள் பெறும் சிறந்த 8 அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
 • எந்த அணி ஒட்டி அல்லது வெட்டிப் பேச வேண்டும், எந்த அணியோடு போட்டியிட வேண்டும், எந்த விரிவலை அறைகளில் போட்டி நடத்தப்பெறும் எனும் விளத்தங்கள் கீழ்காணும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளன.
அணி எண்நிலைப்பாடுஎதிர்அணி எண்நிலைப்பாடுஅறை  எண்   
01ஒட்டிஎதிர்06வெட்டிமுகப்பு அறை
02வெட்டிஎதிர்07ஒட்டிஅறை 02
03ஒட்டிஎதிர்08வெட்டிஅறை 03
04வெட்டிஎதிர்09ஒட்டிஅறை 04
05ஒட்டிஎதிர்10வெட்டிஅறை 05
 • எந்த அணி ஒட்டி அல்லது வெட்டிப் பேச வேண்டும் என்பது ஆந்தந்த அறையில் சுழல் சக்கரம் மூலம் தேர்வு செய்யப் படும்.
 • சுழல் சக்கரத்தில் தேர்வாகும் முதல் அணி ஒட்டியிலும் தேர்வாகாத அணி வெட்டியிலும் பேசுவர்

Leave a Reply